31.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
Photo 15 07 14 030
பழரச வகைகள்

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

தேவையான பொருட்கள்
ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றரை கப்
வெனிலா ஐஸ்க்ரீம் – தேவைக்கு
காய்ச்சி ஆற வைத்த பால் – தேவைக்கு
சாக்லேட் தூள் – ஒரு தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள்

செய்முறை :

• ராகி மாவை வெறும் வானெலியில் சிறு தீயில் பச்சை வாசம் போக வறுக்கவும். நன்றாக ஆற விடவும். ஆற வைத்த வறுத்த ராகி மாவை அரை கப் நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
• ஒரு கப் தண்ணீரை கொதிக்க விடவும், அதில் கரைத்த ராகியை ஊற்றி, கிளறவும். மிதமான தீயில் வேக வைக்கவும். அடி பிடிக்காமல் கிளறவும். ராகி கூழ் நன்றாக கெட்டிப் படும் போது இறக்கி ஆற வைக்கவும்.
• மிக்சியில் ராகி கூழ், பால், வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லேட் தூள் ஐஸ் கட்டிகள் சேர்த்து, நுரை பொங்க அடிக்கவும்.
• குழந்தைகளுக்கு மேலே சிறிது ஐஸ்க்ரீம் வைத்து பருக கொடுக்கவும்.
• 100 சாக்லேட் தூள் அல்லது டிரிங்கிங் சாக்லேட் தூள் சேர்த்தும் இதே முறையில் சேர்க்கலாம். இனிப்புக்கு தேவையானால் பேரிச்சை சேர்த்தும் அடிக்கலாம்.

Photo++15 07 14+030

Related posts

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan

தேசிக்காய் தண்ணி

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

அரேபியன் டிலைட்

nathan

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

ஃபலுடா மில்க் ஷேக்

nathan

சுவையான கேரட் ஜூஸ்

nathan

பப்பாளி லெமன் ஜூஸ்

nathan

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan