24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
1465645555 2794
சைவம்

வாழைப்பூ குருமா

தேவையானப் பொருட்கள்:

வாழைப்பூ – 1
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 3
பட்டை, கிராம்பு – சிறிதளவு
அன்னாசி பூ, பிரியாணி இலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் – 8
தேங்காய் துருவல் – சிறிதளவு
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கசகசா – அரை டீஸ்போன்
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறு துண்டு

1465645555 2794

செய்முறை:

வாழைப் பூவை பிரித்து இதழ்களின் நடிவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றில் வரமிளகாய், சோம்பு, சீரகம், கசாகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

வெங்காயம், தக்காளியை சிறிது பெரியதாக நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி, தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

எண்ணை பிரிந்ததும் வாழைப் பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்கவிடவும். வாழைப்பூ குருமா ரெடி. இறக்கி வைத்து கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

Related posts

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு

nathan

நார்த்தங்காய் சாதம்

nathan

சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி

nathan

காலிப்ளவர் பொரியல்

nathan

தக்காளி புளியோதரை

nathan