28.9 C
Chennai
Monday, May 20, 2024
02 spicy jackfruit curry
சைவம்

சுவையான செட்டிநாடு பலாக்காய் கறி

என்னென்ன தேவை?

பலா பிஞ்சு – 1/2 கிலோ,
வெங்காயம் – 1 கிலோ,
நாட்டு தக்காளி – 3/4 கிலோ,
பச்சைமிளகாய் – 10,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.,
இஞ்சி – 200 கிராம்,
பூண்டு – 130 கிராம்,
கொத்தமல்லித்தழை – சிறிது.

மசாலா அரைக்க…

காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 20 கிராம்,
சோம்பு, மரத்திமுக்கு, அன்னாசிப்பூ – 20 கிராம்,
முந்திரி – 100 கிராம்,
தேங்காய்த்துருவல் – 100 கிராம்,
மிளகு – 20 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது.


எப்படிச் செய்வது?

மசாலாவிற்கு…

கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மரத்திமுக்கு, அன்னாசிப்பூ, முந்திரி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரில், சிறிய துண்டுகளாக நறுக்கிய பலா பிஞ்சு, மஞ்சள் தூள், உப்பு போட்டு வைக்கவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி ேசாம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவை ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பின்பு அதில் பலா பிஞ்சு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி சுருண்டு வந்ததும், கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி பரிமாறவும்.

Related posts

மீல்மேக்கர் சோயா குழம்பு

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

சூப்பரான துவரம் பருப்பு கடைசல்!

nathan

சில்லி சோயா

nathan

புளியோதரை

nathan

சத்தான பாலக் தயிர் பச்சடி

nathan

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி

nathan

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan

சுவையான வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan