31.1 C
Chennai
Saturday, May 25, 2024
10 brinjal fry
சைவம்

கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 5 -6 . வட்டமாக அரிந்து கொள்ளவும் .இதை Chinese கத்தரிக்காய் , பெரியவகை , நீள வகை எந்த வகை கத்தரிகாயிலும் செயலாம் .சுவை நன்றாக இருக்கும் .

மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன் . இது கலந்து அரைத்த மிளகாய் தூள் .உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்து கொள்ளவும் .

உப்பு ருசிகேற்ப.

கடலை மாவு – 1 1/2 ஸ்பூன் .

பெருஞ்சீரக/சோம்பு தூள் – 1 ஸ்பூன்

எண்ணெய் தேவைகேற்ப

செய்முறை :

அரிந்து வைத்துள்ள கத்தரிக்காயை தண்ணீர் வடித்து மேலே சொன்ன பொடிகளை போட்டு பிசறி ஒரு 1௦ நிமிடம் ஊறவைத்த பின்னர்

தோசை தவாவில் ஒரு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு கல் முழுவதும் படும் படி தேய்த்து கத்தரிக்காயை இடம் கொண்ட அளவு போட்டு தோசைக்கு சேர்ப்பது போல சிறிது எண்ணெய் சுற்றிலும் சேர்க்கவும்

கத்தரிக்காய் சிவந்ததும் (தோராயமாக 3-5 நிமிடத்திற்கு பிறகு) திருப்பி போட்டு வேக வைக்கவும் . அடுத்த பாகம் சிவந்ததும் எடுத்துவிடவும் .மீதமுள்ளவையும் இதே போல செய்யவும் .

கத்தரிக்காய் வறுவல் தயார் .

diet பற்றி கவலை இல்லை என்றால் வானலியில் நான்கு அல்லது ஐந்து கரண்டி எண்ணெய் விட்டு நாலு ஐந்து கத்தரிக்காய் துண்டுகளாக போட்டு எடுக்கலாம் .நல்ல மொறு மொறுப்பாக சுவையாக இருக்கும் .

வாங்கிய கத்தரிக்காய் முற்றலாக இருந்தால் இதே போல செய்யலாம் .முற்றிய கத்தரிக்காய் மற்ற வகை பதார்த்தம் செய்தால் சுவையாக வராது .
10 brinjal fry

Related posts

பேபி உருளைக்கிழங்கு பெப்பர் ஃப்ரை

nathan

உங்களுக்காக பூண்டில் செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்வது எப்படி

nathan

பாலக்கீரை காளான் பிரட் டோஸ்ட்!

nathan

வடை கறி

nathan

சுவையான காளான் ரோஸ்ட்

nathan

நெல்லிக்காய் சாதம்

nathan

உருளைக்கிழங்கு பனீர் குருமா

nathan

சுரைக்காய் கூட்டு

nathan

மாங்காய் சாதம்

nathan