32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சைவம்

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 15
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
தேங்காய் – 2 துண்டுகள்
பூண்டு – 10 பல்
கடுகு – 1/4 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
தனியா பொடி – 1
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
புளி தண்ணீர் – 1 கப்
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கீற்று
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

* மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

* அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

* இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

* அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

Related posts

பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்

nathan

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

வாழைக்காய் பொரியல்

nathan

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan