31.1 C
Chennai
Saturday, May 17, 2025
Hips neck armpit area to dispel the black tips
சரும பராமரிப்பு

இடுப்பு, கழுத்து, அக்குள் பகுதிகளில் கருமை மறைய டிப்ஸ் tamil beauty tips

பாவாடை அணியும் பகுதியின் கருமை, கழுத்தின் பின்பகுதி கருமை, அக்குள் கருமை, பிரேஸியர் லைன்… இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

இடுப்பு, கழுத்து, அக்குள் பகுதிகளில் கருமை மறைய டிப்ஸ்
பாவாடை அணியும் பகுதியின் கருமை, கழுத்தின் பின்பகுதி கருமை, அக்குள் கருமை, பிரேஸியர் லைன்… இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

இடுப்பின் கருமை :

புடவையோ, சுடிதாரோ இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். அதைப் போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 5 – 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் கொடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.

அடுத்ததாக, இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் அதைக் கழுவி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்யும்போது கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

பின் கழுத்தின் கருமை :

ஒரு ஸ்பூன் தவிடு எடுத்து, ஈரக்கையினால் அதைத் தொட்டு, தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க… இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு, பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் `பேக்’ போட்டு, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால், கருமை காணாமல் போவதுடன் சருமமும் மிருதுவாகும்.

அக்குள் பகுதியின் கருமை :

அக்குள் பகுதிக்குத் தேவையான காற்று கிடைக்காததால் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க, வாரம் இருமுறை ஏதாவது எண்ணெயைக் கொண்டு அக்குளுக்கு மசாஜ் கொடுத்து, மாதுளம்பழத்தின் கொட்டைகளை உலர்த்தி செய்யப்பட்ட பவுடர் ஒரு ஸ்பூனுடன் தண்ணீர் சேர்த்துக் குழைத்து, அதனுடன் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கலந்து மசாஜ் கொடுக்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் தேனுடன், அரை மூடி எலுமிச்சையின் சாறு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் கழுவவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லரில் `பிளீச்’சும் செய்துகொள்ளலாம்.

பிரேஸியர் லைன் :

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.Hips neck armpit area to dispel the black tips

Related posts

ஷவரில் குளிப்பதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

nathan

வெயிலால் கருமையா? எண்ணெய் சருமமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

இந்த’ மலர்களின் நீரை யூஸ் பண்ணா..அழகான சருமம் கிடைக்குமாம் தெரியுமா?

nathan

அழகை அதிகரிக்க ஓட்ஸை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

வயதானலும் அழகை கூட்ட வழிகள்

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

வெயிலில் கருப்பான முகத்தை பொலிவாக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan