32.4 C
Chennai
Monday, Aug 11, 2025
ggfffjj
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இதோ ஈஸியான டிப்ஸ்.. எப்போதும் இளமையாக இருக்க ……

தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.

* காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத் திறந்து திறந்து மூடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்திலும் கண்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள்.

* நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.

* உடலில் கழுத்துப்பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப்போடப்படும்.
ggfffjj
* வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கும்போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

* காலையில் குளிப்பதற்கு முன்னால் உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங் கட்டாயம் செய்ய வேண்டும். இதற்கு நேரமில்லை என்பவர்கள் பாலேட்டால் முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய்ப்பசை சருமம் என்றால், சோற்றுக்கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

* அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதாம் மிக மிக அவசியம். அப்படியே சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள் வரலாம் என்பதால், முதல் நாள் இரவே பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடலாம். ஒரு நாளுக்கு 4 அல்லது 5 பாதாம் போதும்.

* காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் உலர்ந்த பழங்கள் அல்லது ஃபிரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் ஒரு கைப்பிடியளவு போதுமானது. ஃபிரெஷ்ஷான பழங்கள் என்றால் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம். கொரோனா தொற்று பயம் இருக்கிற இந்த நேரத்தில் பழங்களின் தோலை நீக்கிவிட்டே சாப்பிடுங்கள். பிறகு முக்கால் மணி நேரம் கழித்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.

* காலையில் உலர் பழங்கள், ஃபிரெஷ் பழங்கள் சாப்பிட முடியாதவர்கள் ஒரு தக்காளி, கால் துண்டு பீட்ரூட், ஒரு கேரட், சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து ஜூஸாகக் குடிக்கலாம். ஆரோக்கியத்துடன் சரும அழகும் அதிகரிக்கும்.

* வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தவறாமல், உங்கள் சருமத்துக்கு ஏற்ற, காலநிலைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை முகத்தில் அப்ளை செய்யவும்.

* கடைசி பாயின்ட், ஆனால் மிக மிக முக்கியமான பாயின்ட். தாகம் எடுக்கும்போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு அருந்துங்கள். காலையிலேயே பாட்டிலில் பிடித்துவைத்துவிட்டு இரவுக்குள் அருந்தும் வழக்கத்தையும் கடைப்பிடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். தவிர, உடலில் இருக்கிற கழிவுகளும் முழுமையாக வெளியேறும்.

Related posts

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி இரகசியம் இதுதான் !!!

nathan

dark lips Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா?

nathan

வீட்டில் இருந்தபடியே அழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்

nathan

முகத்தில் பருக்களின் கருமையான தழும்புகள் இருந்து, அசிங்கமான தோற்றத்தைக் கொடுத்தால் எப்படி மீளலாம்

nathan

பெண்களே உங்களுக்கு தெரியுமா மருதாணியில் ஒளிந்திருக்கும் தனித்துவமான ரகசியம்!

nathan

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..,beauty tips tamil for face

nathan

பெண்கள் ஹேர் ஷேவ் பண்ணும் போது செய்ய கூடாதவை

nathan

குளிர்ச்சி குளியல்

nathan