30.5 C
Chennai
Friday, May 17, 2024
201606090902469370 how to make ragi
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

குழந்தைகளுக்கு மிகவும் விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 200 கிராம்,
மிளகாய்த் தூள் – சிறிதளவு,
பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் – தலா 50 கிராம்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும்.

* இந்த மாவில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும்.

* மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

* இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்சர் ரெடி!

பலன்கள்:

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. உடலுக்கு வலிமையைத் தரும்.201606090902469370 how to make ragi

Related posts

கொத்து ரொட்டி

nathan

தாளித்த கொழுக்கட்டை

nathan

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

ரோஸ் லட்டு

nathan

சூப்பரான உளுந்தம் மாவு புட்டு

nathan

இறால் கட்லெட்

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

ஷாஹி துக்ரா

nathan