29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சாமை காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி மாவு – 500 கிராம்,
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
சீரகம் – ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி – 1,
சின்ன வெங்காயம் – 250 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

* கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

பலன்கள்:

நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.

Related posts

சீஸ் போண்டா

nathan

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan

சத்தான கேழ்வரகு இட்லி

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான சென்னா சாட்

nathan

நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை

nathan

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan