27 C
Chennai
Thursday, Mar 12, 2026
201606071117549699 how to make manathakkali keerai soup SECVPF
சூப் வகைகள்

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் மணத்தக்காளி சூப் செய்வது எப்படி பார்க்கலாம்.

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி – ஒரு கட்டு
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
மிளகு தூள் – சிறிது
தண்ணீர் – 2 டம்பளர்
எலுமிச்சை – அரை மூடி
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பெருங்காய தூள் – தேவையான அளவு
உளுந்து – தாளிக்க

செய்முறை :

* மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் மணத்தக்காளி கீரையை போட்டு வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

* 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

* தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.

* இறக்கியவுடன் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும்.

* சுவையான சத்தான மணத்தக்காளி சூப் தயார்.

* மணத்தக்காளி சூப் வயிற்று புண், வயிறு கோளாறுகளை சரிசெய்யும்.
201606071117549699 how to make manathakkali keerai soup SECVPF

Related posts

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

கேழ்வரகு வெஜிடபிள் சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan

பானி பூரி சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

இறால் சூப்

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan

காய்கறி சூப்

nathan

சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan