என்னென்ன தேவை?
ப்ராக்கோலி – 1/2 (நறுக்கியது),
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது),
உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது),
பூண்டு – 4 பற்கள்,
தண்ணீர் – 1/8 கப்,
பால் – 1/4 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முதலில் ப்ராக்கோலியை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, அதனை குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, அதில் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி சூப் ரெடி!!!