வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சுவையான சீரகக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்பு
தேவையான பொருட்கள் :
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
வெந்தயம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை :
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
* புளியை ஒரு கப் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள்.
* வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டை சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள்.
* சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்த்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்.
* பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
* நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி எட்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.
* ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* சுவையான சீரகக்குழம்பு ரெடி.