ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இந்த மோசமான உணவுப் பொருளை தயிருடன் சேர்த்து அதிகமாக சாப்பிட்டால் கொடிய விளைவை சந்திக்க நேரிடும்!

தயிர் யாருக்குத்தான் பிடிக்காது. தயிர் என்பது இயற்கை நமக்குக் கொடுத்த அரிய மருந்து. பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நமக்குத் தெரியும்.

அத்தகைய பாலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தயிரானது, சாப்பிடுகிறவரை மிக எளிதில் ஜீரணமாக்கும்.

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் நம்முடைய வீட்டிலேயே பசும்பாலில் தயிர் உறைய வைத்து, பசுந்தயிர் செய்வார்கள். அது சரியான அளவில் புளிக்க வைக்கப்பட்டு ஃபிரஷ்ஷாக நமக்குக் கிடைக்கும். ஆனால் தற்சமயமோ அதற்கெல்லாம் நமக்கு நேரமும் இல்லை.

Curd is good for the stomach SECVPF

தற்போது கடைகளில் தயிர் பாக்கெட்டுகளில் தான் நமக்குக் கிடைக்கின்றன.

இந்த தயிர் பாக்கெட்டுகளில் புரதத்தைத் தனியாக உறிஞ்சிவிட்டு, குறைந்த புரத அளவில் உள்ள தயிர் தான் நமக்குக் கிடைக்கிறது.

முழு புரதத்துடன் கூடிய புரோட்டீன் நிறைந்த ரிச் புரோட்டீன் தயிர் தனித்த விலையில் கிடைக்கிறது. அதனால் தயிர் பாக்கெட்டுகள் வாங்குகின்ற பொழுது, ரிச் புரோட்டீன் என்று இருப்பதையோ அதனுடைய ஊட்டச்சத்துக்களின் பட்டியலில் புரோட்டீனின் அளவு 15 முதல் 18 கிராம் அளவுள்ளதாகப் பார்த்து வாங்குங்கள்.
தயிரில் உடலுக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம் போன்றவை அதிகம் இருந்தாலும், இதையும் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.

சிலருக்கு தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட பிடிக்கும். ஆனால் சர்க்கரை மிகவும் மோசமான உணவுப் பொருள், அதை தயிருடன் சேர்த்து அதிகமாக சாப்பிட்டால், கொடிய விளைவை சந்திக்க நேரிடும்.

வேண்டுமெனில் ஒரு சிறிய கப் தயிரை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button