எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக்கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சரி, இப்போது பசலைக்கீரை முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 2 கப் (நறுக்கியது) முட்டை வெள்ளைக்கரு – 4 மெஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பசலைக்கீரையைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் சீஸை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கிளறி, உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், பசலைக்கீரை முட்டை பொரியல் ரெடி!!!