அசைவ வகைகள்

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

விடுமுறை நாட்களில் தான் நம்மால் மீனை வாய்க்கு சுவையாக சமைத்து பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், இந்த வாரம் கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள்.

இதை செய்வது மிகவும் சுலபம். இங்கு அந்த கறிவேப்பிலை மீன் வறுவலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish) – 1 பெரிய கையளவு தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு… கறிவேப்பிலை – 1 கையளவு மிளகு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2-3 பூண்டு – 4 பற்கள் பச்சை மிளகாய் – 3-4 மல்லித் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த மசாலாவை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை வைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

can pregnant women eat fish2 21 1453376538 18 1466237732

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button