அசைவ வகைகள்

சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு

நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு (கொத்துக்கறி) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு
தேவையான பொருட்கள் :

மட்டன் கீமா (கொத்துக்கறி) – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
நெய் – 2௦ கிராம்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
முட்டை – 2
பட்டை – 2
லவங்கம் – 2
ஏலக்காய் – 2
முந்திரி பருப்பு – 15
கறிவேப்பில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

* மட்டன் கீமாவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* குக்கரில் கழுவிய மட்டன் கீமாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

* கீமா வெந்து நீர் வற்றியதும், ஆற வைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

* ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்த கீமாவை சேர்த்து கிளறவும்.

* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி கைவிடாமல் கிளறி உப்பு சரி பார்க்கவும். முட்டை உதிரியாக வரும் வரை கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரி துவி இறக்கி பரிமாறவும்.201611191657117107 sunday special mutton keema puttu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button