30.3 C
Chennai
Tuesday, Jul 14, 2026
சிற்றுண்டி வகைகள்

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும்.

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
கேரட் துருவல் – ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்,
பச்சைமிளகாய் – 1,
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
விருப்பப்பட்டால் நெய் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – அரை மூடி.

செய்முறை :

* ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

* கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கிய பின்னர் கேரட் துருவல், வேர்க்கடலை போட்டு வேகும் வரை வதக்கவும்.

* எல்லாம் சேர்ந்து வெந்ததும் அதில் ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும்.

* உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

* சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி.

Related posts

வெஜிடபிள் பாட் பை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

nathan

தால் கார சோமாஸி

nathan

பீட்ரூட் ராகி தோசை

nathan

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

nathan

வாழைப்பூ வடை செய்வது எப்படி Vazhaipoo-vadai.

nathan

கொண்டைக்கடலை கட்லெட்

nathan

பாலக் பூரி

nathan

குஷ்பு  இட்லி,தட்டு  இட்லி,பெப்பர்  இட்லி

nathan