சில்லி சோயா
தேவையானவை
சோயா – 100 கிராம்
வெங்காயம் – 2
வெங்காயம் பேஸ்ட் – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 2 மேஜைக்கரண்டி
குடமிளகாய் – 1
சோயா சார்ஸ் – 2 மேஜைக்கரண்டி
சில்லி சார்ஸ் – 2 மேஜைக்கரண்டி
டொமாடோ சார்ஸ் – 2 மேஜைக்கரண்டி
வைட் வினிகர் – 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 4-5
உப்பு – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 5 மேஜைக்கரண்டி
செய்முறை
சோயாவை 10நிமிடம் வேக வைத்து பிறகு அதை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து வைக்கவும் .பின்பு அதை வெங்காயம் பேஸ்ட் ,1மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட் ,1 மேஜைக்கரண்டி சோயா சார்ஸ் ,டொமாடோ சார்ஸ் ,சில்லி சார்ஸ் மற்றும் வினிகர் சேர்த்து 1மணி நேரம் ஊறவிடவும் .
எண்ணெயை சூடு செய்து ஊறவைத்த சோயாவை அதில் போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும் .இதை ஒரு தட்டிற்கு மாற்றவும் .
மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் .பிறகு இஞ்சி -பூண்டு விழுது போட்டு 2-3 நிமிடம் வதக்கவும் அடுத்து அந்த சோயா சேர்த்து மீதமுள்ள சார்ஸ் ,உப்பு மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும் .நன்கு கலக்கி அதை மூடி வைக்கவும் .குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும் .பச்சை மிளகாய் போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும் .