31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

உருளையில் அதிக அளவில் ஸ்டார்ச் சத்து உள்ளது. 100 கிராம் உருளை 70 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

* மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராமிற்கு 0.1 கிராம் கொழுப்பு இதிலுள்ளது. வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்ச்சத்து உருளையில் மிகுந்து காணப்படுகிறது.

* உருளையில் எளிதில் கரையத்தக்க மற்றும் கரையாத, நார்ச்சத்துக்கள் உள்ளன. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலைத் தடுக்கும். கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.

* நார்ச்சத்தானது குடலில் இருந்து ஒற்றைச் சர்க்கரையை உறிஞ்சு கொள்கிறது. மேலும் ஸ்டார்ச்சை மெதுவாக ஜீரணம் செய்ய உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் உருளை பங்கெடுக்கிறது.

* பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உருளைக் கிழங்கில் மிகுந்துள்ளது. பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின், நியாசின், பான்டோதெனிக் அமிலம் மற்றும் போலேட்டுகள் அடங்கி உள்ளன.

* புத்துணர்ச்சி மிக்க உருளையின் தோலில் நிறைய ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி மிகுந்துள்ளது. 100 கிராம் கிழங்கில் 11.4 மில்லிகிராம் அளவில் வைட்டமின் சி உள்ளது. பல்வேறு காய் கறிகளில் இருந்தும் தொடர்ச்சியாக உடலுக்கு வைட்டமின் சி, கிடைப்பது பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்கும் வேலையைச் செய்கிறது. ப்ரீ ரேடிக்கல்களையும் கட்டுப்படுத்துகிறது.

* அதிக அளவில் இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உருளையில் அடங்கி உள்ளது.

* சிவப்பு மற்றும் பழுப்பு நிற உருளையில் தேவையான அளவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.

* புற்று நோய் மற்றும் இதய பாதிப்புகளுக்கு எதிராக செயலாற்றும் திறன் உருளையில் இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

Related posts

அசைப்பிரியரா நீங்கள்? கண்டிப்பாக படிக்கவும்

nathan

சூப்பர் டிப்ஸ்! ஹார்மோன்களை இயற்கையாக சீராக்க உதவும் அற்புதமான வழிகள்..!

nathan

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

nathan

சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்

nathan

உங்களுக்கு என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை மட்டும் அதிகரிக்க முடியவில்லையா? இதை முயன்று பாருங்கள்..

nathan

சர்க்கரை நோயை அடியோடு அழிக்க பயன்படும் கிராம்பு -தெரிஞ்சிக்கங்க…

nathan

பாலை விட அதிக புரதச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு

nathan

இந்த உணவுகள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை எளிதில் குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்

nathan