30.8 C
Chennai
Sunday, May 11, 2025
men site 002.w540
மருத்துவ குறிப்பு

சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள்

ஆண்கள் என்றால் வீரமுடன் இருக்க வேண்டும், பெண்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும், பணிவு, பண்பு, நல்ல குணாதிசயங்கள், பருப்பு, வெங்காயம் தக்காளி என சீரியஸாக பேசும் போது பல்வேறு விஷயங்கள் கூறலாம். ஆனால், கூலாக, ஜாலியாக சைட் அடிக்கும் ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பது பற்றி யாருக்கெல்லாம் தெரியும்.

எப்படியும் சைட் அடிக்கும் அவர்களுக்கு தானே தெரியும். ஆண்கள் நினைப்பதுண்டு பெண்கள் என்ன அப்படி சைட் அடித்துவிடுகிறார்கள் என, ஆனால், காதலிப்பது மட்டுமின்றி, கலாய்ப்பதிலும், சைட் அடிப்பதிலும் கூட நாங்க தான் கெத்து என பெண்கள் சவடால் விடுகிறார்கள்.

சரி, தாங்கள் சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் விரும்பும் 6 விஷயங்கள் பற்றி இனி பார்க்கலாம்.

ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து, அதை முழங்கை வரை மடித்து விட்டுக் கொள்வது தான் ஆண்களின் கெத்து என சில பெண்கள் கூறுகிறார்கள்.

இந்த நான்கு நாள் தாடி சேது விக்ரம், நந்தா சூர்யாவிடம் இருந்து ஒரு கவர்ச்சியை உண்டாக்கிவிட்டது. இது ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் பிடிக்கிறதாம். ஆனால், மாத கணக்கில் வளர்ப்பது பயத்தை உண்டாக்குகிறது என கூறுகிறார்கள்.

எங்களுக்கு தெரிந்துவிட்டது என்ற போதிலும், தைரியமாக, அசடு வழியாமல் தைரியமாக பார்க்கும் ஆண்களை பெண்களுக்கு அதிகமாகவே பிடிக்கிறதாம்.

பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான். பைக்கை ஸ்டைலாக ஓட்டும் ஆண்கள் மீது தனி ஈர்ப்பு உண்டாகிறதாம்.

வெறுமென கட்டை மீசை வைப்பவர்களை விட தற்போதைய டிரென்ட்டுக்கு ஏற்றார் போல ஸ்டைலாக மீசை, தாடி வைக்கும் ஆண்கள் தனித்துவமாக தெரிகிறார்கள் என கூறுகிறார்கள்.

சைட் அடிப்பது பெரிய தவறில்லை. இந்த வயதில் அப்படி தான் இருக்கும். ஆனால் அப்படியே விழுங்குவதை போல பார்க்க வேண்டாம். ஜொள்ளு விடாமல் புன்னகைக்கும் வரையில் லிமிட்டாக இருக்கலாம் தவறில்லை என்கிறார்கள்.men site 002.w540

Related posts

மாதவிடாய்க்கு இடையூறாக அமையும் சில தினசரி பழக்கவழக்கங்கள்!!!

nathan

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

nathan

தற்கொலை எண்ணம் வரக்காரணம் என்ன?

nathan

ஹைப்போ தைராய்டு இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

nathan

புற்றுநோயும் கூந்தலும்

nathan

உங்க கருவுறாமை பிரச்சனை பற்றிய கட்டுக்கதை என்னென்ன தெரியுமா?

nathan

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வரவேண்டுமா ? இதோ சில யோசனைகள்!

nathan

புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா… ஆண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan