25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3607
சூப் வகைகள்

மைன்ஸ்ட்ரோன் சூப் (இத்தாலி)

என்னென்ன தேவை?

பிரவுன் ஸ்டாக்குக்கு…

கேரட் – 1 கப்,
பீன்ஸ் – 1 கப்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2 (அனைத்தையும் பொடியாகநறுக்கிக் கொள்ளவும்).

சூப்புக்கு…

மக்ரோனி – 100 கிராம்,
தக்காளி சாஸ் அல்லது கெட்சப் – 1/2 கப்,
வெண்ணெய் – 50 கிராம்,
சோள மாவு – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத் தூள் – தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய செலரி, கேரட், வெங்காயம்,
தக்காளி – தேவைக்கு, சீஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஸ்டாக் செய்ய கொடுத்த காய்கறிகளை தண்ணீரில் போட்டு மூடி, நீண்ட நேரம் மெல்லிய தீயில் கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டினால் அதுவே பிரவுன் ஸ்டாக். வெண்ணெயை ஒரு கனமான வாயகன்ற பாத்திரத்தில் உருக்கவும். அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் கேரட், தக்காளி போட்டு வதக்கி சோள மாவு சேர்க்கவும். நன்றாக வதங்கியவுடன் பிரவுன் ஸ்டாக் சேர்க்கவும். உப்பு, மிளகுத் தூள், செலரி, தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறவும். இதற்குள் மக்ரோனியைக் கொதிக்கும் நீரில் உப்பு போட்டு வேக வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை கொதிக்கும் சூப்பில் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கி வைத்து, மேலே சீஸ் தூவிப் பரிமாறவும்.sl3607

Related posts

நூடுல்ஸ் சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

டோம் யும் சூப்

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க சூப் குடிங்க

nathan

பசியை தூண்டும் சீரகம் – தனியா சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

எளிதான முறையில் வாழைத்தண்டு சூப் செய்ய…..

nathan

இறால் சூப்

nathan

காளான் சூப்

nathan