25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

வல்லாரையின் அற்புத நன்மைகள்

vallarai_002நினைவாற்றலை அதிகரிக்கும் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது வல்லாரை கீரை தான்.

தரையில் படர்ந்து வளரும் இயல்புடைய இந்த கீரை மூளைக்கான உணவு என்றழைக்கப்படுகிறது.

இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

இந்த மூலிகையில் Asiaticoside, Resins போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது, துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது.

வல்லாரையில் இருக்கும் Antiascorbic Acid தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது.

வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு மிகப்பெரிய சக்தியை தருகிறது.

உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும் வல்லாரை தனி இடம் வகிக்கிறது.

எப்படி சாப்பிடலாம்?

* வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.

இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும், இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

* சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

* பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்த்து தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும்.

* 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும், திக்குவாய் குணமாகும்.

Related posts

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

nathan

தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மாதவிடாய் கோளாறு கர்ப்பப்பை குறைபாடுகள் தீர்க்க செம்பருத்தி!…

sangika

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

காளானில் ஆயிரம் நன்மை!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்!

nathan

கர்ப்ப காலத்தில் எந்த உணவுகள் எடுத்து கொள்ளவேண்டும்…..?

nathan

மஞ்சள் இஞ்சி மகிமை!

nathan

உங்களுக்கு தெரியுமா சத்தான டிபன் ராகி உப்புமா செய்வது எப்படி?

nathan