29.2 C
Chennai
Friday, May 17, 2024
sl4225
சைவம்

உருளைக்கிழங்கு கிரிஸ்பி

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பூண்டு – 5, மிளகு – 10,
கொத்தமல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்,
ரோஸ்மேரி – 1/4 டீஸ்பூன்,
தைம் – 1/4 டீஸ்பூன் (தைம் ஒருவகை மூலிகை. கடைகளில் கிடைக்கும்),
எண்ணெய் – 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை தோல் உரித்து சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து அதில் வெட்டி வைத்த உருளைக்கிழங்குகளை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். எண்ணெய் தனியே பிரியும் வரை வறுக்கவும். உருளைக்கிழங்கு நல்ல பொன்னிறமாக வறுபட்டவுடன் உப்பு, தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரோஸ்மேரி, தைம் போன்ற அனைத்தையும் நன்கு கலந்து 2 நிமிடம் வறுத்து எடுத்தால் சுவையான கிரிஸ்பி பொட்டேட்டோ ஃப்ரை ரெடி.
sl4225

Related posts

கடலை கறி,

nathan

கத்தரிக்காய் பொரியல் கறி

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான நெய் சாதம்

nathan