29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
பழரச வகைகள்

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

மிகவும் சத்து நிறைந்த டிரை நட்ஸ் ஷேக் செய்வது மிகவும் எளிமையானது. மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளும் விரும்பி பருகுவார்கள்.

டிரை நட்ஸ் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :

பாதாம் – 4
பிஸ்தா – 4
அக்ரூட் – 4
முந்திரி – 4
பேரீச்சம் பழம் – 2
பால் – 1 டம்ளர்
தேன் – 2 தேக்கரண்டி
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு

செய்முறை:

* பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி ஆகியவற்றை தண்ணீர்விட்டு ஊறவைத்துக் கொள்ளவும்.

* பிறகு பாலை காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும்.

* பின்னர் ஊறிய பருப்பு வகைகளின் தோலை நீக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்துக் கொள்ளவும்.

* அத்துடன் தேன், பால், ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொண்டு, இந்தக் கலவையை மீண்டும் மிக்ஸியில் சுழற்றி எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகலாம்.

* சூப்பர் டேஸ்ட், சூப்பர் சத்து.

Related posts

வைட்டமின் காக்டெய்ல்

nathan

பாதாம் கீர்

nathan

வாழைத்தண்டு மோர்

nathan

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

nathan

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

nathan

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

nathan

இஞ்சி மில்க் ஷேக்

nathan

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

nathan

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

sangika