30.8 C
Chennai
Monday, May 20, 2024
h61
ஆரோக்கிய உணவு

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவதோடு, எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன.

அதிலும் காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று, இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் பலர். நீங்கள் அந்த வகையினர் என்றால் இக்கட்டுரையை முதலில் படியுங்கள். ஆய்வு ஒன்றில் சமைத்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சூடேற்றி சூடேற்றி உட்கொள்வதால், அதில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதோடு, சில உணவுகள் விஷமிக்கதாகவும் மாறுகின்றன.

இங்கு அப்படி நாம் அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இனிமேல் அவற்றை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள்.

சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்தகைய சிக்கனை 2-3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக பல்வேறு செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சிக்கனை வாங்கி சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்துவிட்டு, மீதமுள்ள ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள்.

பசலைக்கீரையில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் வளமாக உள்ளது. இதனை பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாற்றப்படுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகவும் மாறும். எனவே இந்த உணவுப் பொருளை பலமுறை சூடேற்றாதீர்கள்.

முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்தும் சாப்பிடக்கூடாது. ஆய்வு ஒன்றில் முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது நச்சுமிக்கதாக மாறி, செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளதால், இதனை வாங்கி ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான விளைவை சந்திக்க நேரிடுமாம்.

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் சூடேற்றி உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஒருசில சத்துக்களானது பலமுறை சூடேற்றும் போது நச்சுமிக்கவையாக மாறிவிடும். மேலும் உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதிலிருந்து முழு சத்தையும் பெற முடியும்.
h61 768x432 1

Related posts

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

nathan

அடேங்கப்பா! இந்த மூன்று ராசிகளில் ஒன்று உங்க ராசியா? அப்போ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க தான்!

nathan

வித்தியாசமான சுவையுடன் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

கோடை வெப்பத்தை சமாளிக்க… தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

nathan

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பாதாம்…

nathan

எந்த உணவுகளை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika

அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா?

nathan