24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
பன்னீர் புர்ஜி சாண்ட்விச்
சமையல் குறிப்புகள்

பன்னீர் புர்ஜி சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

* பிரட் – 4 துண்டுகள்

* வெண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சுள் தூள் – 1 சிட்டிகை

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (வட்டமாக நறுக்கியது)

* தக்காளி – 1 (வட்டமாக நறுக்கியது)

* பன்னீர் – 1/4 கப் (துருவியது)பன்னீர் புர்ஜி சாண்ட்விச்

செய்முறை:

* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின் பிரட் துண்டுகளில் முன்னும் பின்னும் நெய் அல்லது வெண்ணெயை தடவி, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பின் அதில் துருவிய பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பின்பு அந்த பன்னீர் மசாலாவை டோஸ்ட் செய்த பிரட் துண்டின் மீது வைத்து, அதன் மேல் வெங்காயம் மற்றும் தக்காளியை வைக்க வேண்டும்.

* பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி, அதன் மீது மற்றொரு டோஸ்ட் செய்த பிரட் துண்டை வைக்க வேண்டும். இப்போது சுவையான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் தயார்.

 

Related posts

சுவையான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல்

nathan

கொண்டைக்கடலை சமைப்பது எப்படி ? | chickpeas in tamil

nathan

சுவையான சேப்பங்கிழங்கு டிக்கி வீட்டிலேயே செய்யலாம்…..

sangika

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

nathan

சுவையான வல்லாரைக் கீரை துவையல்

nathan

சுவையான மல்லிகைப் பூ போல இட்லி வேண்டுமா?

nathan

உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா?

nathan

தக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

nathan

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

nathan