28.5 C
Chennai
Saturday, May 17, 2025
u4bhoqiXbW
Other News

ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷ்ணு..!

பிக் பாஸ் சீசன் 7 நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. இந்த சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

 

குறிப்பாக இந்த சீசனின் முதல் வாரத்தில் விசித்ரா மற்றும் ஜோதிகா இடையேயான மோதல் பரபரப்பான விவாதமாக மாறியது. படிப்பு தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலர் ஜோவிகாவை ஆதரித்தனர், சிலர் அவரை விமர்சித்தனர்.

 

வனிதாவின் மகள் ஜோவிகா தற்போது ட்ரெண்டாகி வருகிறார். விசித்ரா மற்றும் பிரதீப் ஆகியோருடன் முரண்பட்ட ஜோவிகாவுக்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் விமர்சனங்களும் குவிந்துள்ளன. மற்ற ஆண் போட்டியாளர்களை அவன் இவன், வாடா போடா என்று ஜோவிகா அழைப்பது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.


இதனால் சில ரசிகர்கள் இணையத்தில் ஜோவிகாவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஜோவிகாவை தோற்கடித்தார் விஷ்ணு. இதையடுத்து விஷ்ணுவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

அவர் ஜோவிகாவிடம் பேசியதாவது, உனக்கு முதலில் மற்றவர்களிடம் எப்படி பேசவேண்டும் என தெரிகின்றதா ? அவன் இவன், வாடா போடா என பேசுற. இதே நாங்க வாடி போடி என பேசினால் நீ சும்மா விடுவியா ? எங்களை மட்டும் லிமிட்டுடன் நடந்துக்க சொல்லுற, உனக்கு லிமிட் இல்லையா ?. நாங்க என்ன உன் வீட்டு வேலைக்காரங்களா ? இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசு என ஜோவிகாவை விஷ்ணு சரமாரியாக வெளுத்தி வாங்கினார்.

அதன் பிறகு ஜோவிகா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷ்ணு கேட்டது சரியான கேள்வி என ஆதரவு தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடக்குமா? இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

 

Related posts

குடிபோதையில் இருந்த மணமகன்.., மணப்பெண்ணிற்கு பதில் நண்பனுக்கு மாலை

nathan

சினிமா பிரபலம் உயிரிழப்பு..!‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் சோகம்..!

nathan

ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட நடிகை சமந்தா

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

nathan

மதகஜராஜா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சி

nathan

வெளிநாட்டில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் விடுமுறை கொண்டாட்டம்

nathan