31.7 C
Chennai
Sunday, May 18, 2025
2 trichy sambar 1672389113
சமையல் குறிப்புகள்

சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு – 1 கப்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* சிறிய கேரட் – 1

* கத்திரிக்காய் – 2

* முருங்கைக்காய் -1

* உருளைக்கிழங்கு – 1

* புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

* தேங்காய் – 1 கப்

* வரமிளகாய் – 5

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 5

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – சிறிது

* வரமிளகாய் – 1

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், சீரகம் சேர்த்து நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, லேசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Trichy Style Sambar Recipe In Tamil
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய துவரம் பருப்பை போட்டு, 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் காய்கறிகள், அரைத்த தேங்காய் விழுது, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி அடுப்பில் வைத்து ஒருகொதி விட்டு இறக்க வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார் தயார்.

Related posts

முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்

nathan

கருப்பு எள் தீமைகள்

nathan

தக்காளி குழம்பு

nathan

மாம்பழ பூரி

nathan

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

nathan

அசைவ உணவுகள் சாப்பிடுபவரா? இதோ சில டிப்ஸ்

nathan

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

nathan