26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
butter beans kurma
சமையல் குறிப்புகள்

சுவையான பட்டர் பீன்ஸ் குருமா

தேவையான பொருட்கள்:

* பட்டர் பீன்ஸ் – 1 கப்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 3 டீஸ்பூன்

* கிராம்பு – 2

* பட்டை – 1/2 இன்ச்

* பூண்டு – 5 (பொடியாக நறுக்கியது)

அரைப்பதற்கு…

* தேங்காய் – 3/4 கப்

* முந்திரி – 3

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.

* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

* பின்பு எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பட்டர் பீன்ஸை சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.

* இறுதியில் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி!

Related posts

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி

nathan

உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி

nathan

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

nathan

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

nathan

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan