29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
சிற்றுண்டி வகைகள்

மைக்ரோவேவினுள் வைக்க எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தவை?

என்னுடைய தோழி ஒருத்தி பால் பாக்கெட்டைகூட உள்ளே வைத்து எடுக்கிறாள். சில வகையான கண்ணாடிப் பாத்திரங்களை உள்ளே வைத்தால் தெறித்து விடுகிறது.எந்த வகையான சமையலுக்கு எந்த மாதிரியான பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்? கண்ணாடி என்றால் எந்த மாதிரியான கண்ணாடி?பிளாஸ்டிக் என்றால் எப்படிப்பட்டவை?

சமையல் கலைஞர் ஜெயஸ்ரீ சுரேஷ்

மைக்ரோவேவில் போரோசில், பிரேக்ஸ் (pyrex), இதர கண்ணாடிப் பாத்திரங்கள் வைக்கலாம். இவற்றை மைக்ரோவேவில் சமைக்கவும் பயன்படுத்தலாம். மெட்டல் பாத்திரங்கள், மெட்டல் விளிம்பு வைத்த கண்ணாடி பாத்திரங்கள் வைக்கக் கூடாது. பால் பாக்கெட் பிளாஸ்டிக் என்பதால் வைக்கக் கூடாது. செராமிக், ஸ்டோன்வேர் பாத்திரங்கள் மைக்ரோவேவில் வைக்கலாம் என்று அதில் போட்டு இருந்தால் வைக்கலாம். இவற்றை உணவை சுட வைக்க மட்டும் உபயோகிக்கவும்.

மைக்ரோவேவ் சேஃப் பிளாஸ்டிக் வைக்கலாம். இருப்பினும், அது நல்லது இல்லை. அதில் இருந்து வெளியாகும் toxins நாளடைவில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். கன்வென்ஷன் அவனில் கிரில் மோடில் கிளாஸ் பாத்திரம் வைத்தால் கண்டிப்பாக உடைந்து விடும். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

சில பேர் கடையில் வாங்கும் பிளாஸ்டிக் பேக்கில் (bag) உருளைக்கிழங்கை போட்டு, கவரில் துளைகள் இட்டு மைக்ரோ வேவில் 7-8 நிமிடங்கள் வேக விடுவார்கள். இதுவும் நல்லது அல்ல. ஹெவி டியூட்டி அலுமினியம் பாயில் மாதிரி இருந்தால் கூட பரவாயில்லை… பிளாஸ்டிக் கவர் மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது.

கண்ணாடிப் பாத்திரங்கள் சமைப்பதற்கும்,செராமிக் மற்றும் ஸ்டோன்வேர் பாத்திரங்களை ரீஹீட் செய்வதற்கும் பயன்படுத்தலாம். முடிந்த வரை பிளாஸ்டிக் தவிர்க்கவும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மற்றும் melamine பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது. ஹெவி டியூட்டி பிளாஸ்டிக் மற்றும் டப்பர்வேர் பாத்திரங்கள் உபயோகிக்கலாம். முடிந்த வரை சூடு பண்ணுவதற்கு மட்டும் உபயோகிக்கவும். உணவை சமைக்க மைக்ரோவேவ் ஷேப் கண்ணாடிப் பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.microwave5

Related posts

பார்லி பொங்கல்

nathan

முட்டை பணியாரம்!

nathan

அரிசி வடை

nathan

அமெரிக்கன் கார்ன் – சீஸ் பால்ஸ்

nathan

சுவையான சத்தான கீரை கட்லெட்

nathan

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

nathan

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் அரிவு மாவு சீடை

nathan

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

nathan