34.3 C
Chennai
Sunday, Apr 27, 2025
malabar mutton roast 1625306251 1
சமையல் குறிப்புகள்

மலபார் மட்டன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 600 கிராம்

* வெங்காயம் – 1 (அரைத்தது)

* தக்காளி – 1 (அரைத்தது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீபூன்

* மிளகாய் தூள் – 2 டீபூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீபூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

மசாலாவிற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* வரமிளகாய் – 3

* கறிவேப்பிலை – சிறிது

* சீரகப் பொடி – 2 டீபூன்

* வெந்தயம் – 1/2 டீபூன்

* மிளகுத் தூள் – 1/2 டீபூன்

* கரம் மசாலா – 1/4 டீபூன்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பிரட், குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளைப் போட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய் சேர்த்து கிளற வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி, வெந்தயம், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வெண்டும.

* இந்நிலையில் வேக வைத்து இறக்கியுள்ள மட்டனை மசாலாவுடன் சேர்த்து கிளறிய பின் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான மலபார் மட்டன் ரோஸ்ட் தயார்.

Related posts

பிரட் முட்டை உப்புமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

nathan

சுவையான சில்லி பிரட்

nathan

வாழைப்பழ ரொட்டி

nathan

சுவையான தக்காளி பாஸ்தா

nathan

சுவையான மலாய் பன்னீர் கிரேவி

nathan

இறால் புளிக்குழம்பு செய்யலாம்

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

கத்திரிக்காய் கார குழம்பு

nathan

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

nathan