28.1 C
Chennai
Saturday, Aug 16, 2025
m2
ஆரோக்கிய உணவு

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்!

கோடை வெயில் தகிக்கிறது. எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரி பங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி, சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.

ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம், உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு. சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது. அந்த மாதிரி சமயத்தில் “ஸ்பெஷல் மோர்’ குடிக்கலாம்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம்.

முக்கியமான விஷயம், மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது என்பதில் கவனம் வேண்டும்.
m2

Related posts

ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை

nathan

தூதுவளை இலை உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.

nathan

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது தெரியுமா?பக்க விளைவுகள்

nathan

சளி தொல்லையை போக்கும் துளசி ரசம்

nathan

தினசரி பாலில் கொஞ்சம் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

nathan

தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

Health benefits eating methi seeds- வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்

nathan