24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 tomato thokku 1670511789
சமையல் குறிப்புகள்

சுவையான தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்:

* தக்காளி – 6

* வெங்காயம் – 2

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* சர்க்கரை – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறது

* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் தக்காளியை துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அரைக்கும் போது அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

Tomato Thokku For Poori In Tamil
* பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பின்னர் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.

Related posts

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

என் சமையலறையில்!

nathan

சுவையான சிவப்பு காராமணி குழம்பு

nathan

சுவையான சில்லி முட்டை கிரேவி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்!….

sangika

சுவையான காளான் குருமா

nathan

மஞ்சள் வெங்காய சட்னி

nathan

சுவையான கறிவேப்பிலை குழம்பு

nathan

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika