30.8 C
Chennai
Monday, May 20, 2024
20 egg noodles
சமையல் குறிப்புகள்

சூப்பரான முட்டை நூடுல்ஸ்

விடுமுறை நாட்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் காலை உணவு செய்து கொடுக்க வேண்டுமானால், முட்டை நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இதனால் குழந்தைகள் காலையில் முட்டை சாப்பிட்டவாறு இருப்பதுடன், அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸ் சாப்பிட்டவாறும் இருக்கும். அதுமட்டுமின்றி, முட்டை நூடுல்ஸில் காய்கறிகள் சேர்த்து செய்வதால், காய்கறிகளையும் அவர்களுக்கு கொடுத்த மாதிரி இருக்கும்.

இங்கு அந்த முட்டை நூடுல்ஸின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து உங்கள் குழந்தைக்கு செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 2 கப்
காய்கறிகள் – 1 1/4 கப் (முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய்)
சோயா சாஸ் – 3/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
பூண்டு – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸை சேர்த்து ஒரு கொதி விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் காய்கறிகளை போட்டு மிதமான தீயில் காய்கறிகளில் இருந்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நெருப்பை அதிகரித்து, சிறிது நேரம் நன்கு கிளறி விட்டு, பின் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கினால், முட்டை நூடுல்ஸ் ரெடி!!!

Related posts

சுவையான மிளகு அவல்

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

சூப்பரான மலாய் கார்ன் பாலக்

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

புதினா பன்னீர் கிரேவி

nathan

பீர்க்கங்காய் கிரேவி

nathan