தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு – 1/4 கப்
* துவரம் பருப்பு – 1/4 கப்
* வாழைப்பூ – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 3-4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை சுடுநீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அதை மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பருப்புகள் நன்கு ஊறியதும், அதை பிளெண்டரில் போட்டு ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மோரில் ஊற வைத்துள்ள வாழைப்பூவைப் பிழிந்து சேர்த்துக் கொள்ளவும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காயத் தூள், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைப்பூ வடை தயார்.