30.2 C
Chennai
Monday, May 19, 2025
P20
மருத்துவ குறிப்பு

பித்தப்பை கல் ! அறிகுறிகளை அறிவோம்!

அறிகுறிகளை அறிவோம்!
கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீர், பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறிய குழாய் போன்ற உறுப்பு வழியாக, உணவு செரிமான மண்டலத்தை அடைகிறது. பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு காரணத்துக்காக பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும்.

அறிகுறிகள்

வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும்.

இதர அறிகுறிகள்:

காய்ச்சல்

விட்டுவிட்டு வலி

அதிவேக இதயத் துடிப்பு

மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது)

தோலில் அரிப்பு

வயிற்றுப்போக்கு

வாந்தி

குமட்டல்

குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம்

குழப்பம்

பசி இன்மை

அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல்

வலது தோள்பட்டையில் வலி

யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

பெண்கள்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

உடல் பருமனானவர்கள்

கர்ப்பிணிகள்

உணவில் அதிக அளவில் கொழுப்புச் சத்து சேர்த்துக்கொள்பவர்கள்

உணவில் நார்ச்சத்து குறைவாக சேர்த்துக்கொள்பவர்கள்

சர்க்கரை நோயாளிகள்

உடல் எடையை மிக வேகமாகக் குறைப்பவர்கள்

கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்

ஹார்மோன் தெரப்பி சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜென் உள்ள மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்

மரபு ரீதியாக பித்தப்பை கல் பாதிப்பு உள்ளவர்கள்

தப்பிக்க…

பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால், வாய்ப்பைக் குறைக்க முடியும்.

உணவு

தினமும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

எடை குறைக்க அவசரம் வேண்டாம்: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும்போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வாரத்துக்கு அரை முதல் ஒரு கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது.

சீரான எடை

உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை என்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்குத் தேவையான கலோரியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும், உடல் உழைப்பு மூலம் அதிகப்படியான கலோரியை எரிக்க வேண்டும்.
P20

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்க 7 சூப்பர் வழிகள்!!!

nathan

ஆய்வில் தெரியவந்த உண்மைகள்! இது மட்டும் நடந்தால் சர்க்கரை நோய் வருவது உறுதி:

nathan

குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்:

nathan

பழமா… விஷமா?

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறதா? அப்ப இத படிங்க!

nathan

உங்கள் கவனத்துக்கு கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புதிய தாய்மார்கள் செய்யும் 7 பெரிய தவறுகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! தும்மல் தொடர்ச்சியா வருதா? அதிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில வழிகள்!

nathan