29.1 C
Chennai
Monday, Nov 18, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தோல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை…

grapes_002திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று ஸ்பூன் என இருவேளை சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மன தைரியம் ஏற்படும்.

திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.

வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே இருக்கும்.

Related posts

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

இந்த ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் உங்கள ஹீரோயின் மாதிரி ஜொலிக்க வைக்குமாம்

nathan

தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்

nathan

முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்.

nathan

எடை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

nathan

பெண்களுக்கு அவசியம் தேவை ஐந்து ஊட்டச்சத்துக்கள்

nathan

ஒருவர் நாக்கு அல்சர் நோயினால் பாதிக்கப்படுகையில், சூடான அல்லது காரமான உணவுகள் வலியை தூண்டலாம் என்பதால் இது போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

nathan

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

nathan

உண்மையான காரணம் மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது..

nathan