குடி குடியை கெடுக்கும், குடி பழக்கம் நாட்டை கெடுக்கும்” என்று மதுபானக் கடை வாசலிலேயே எழுதி வைத்தாலும் கூட குடிப்பவர்கள் குடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். அவரவர் நலன் கருதி, அவரவர் திருந்தினால் தான் உண்டு.
ஒரு சில சமயங்களில் மோசமான சரக்கு அல்லது அதிகமான குடியினால் விடிந்தாலும் கூட சிலருக்கு போதை இறங்காது. தலை மிகவும் கனமாக இருப்பது போல உணர்வு இருக்கும். அப்போது தான் இந்த “மங்காத்தா” வசனத்தை பேசுவார்கள்,”இனிமேல் சத்தியமா குடிக்கவே கூடாதுடா சாமி, குடிச்சாலும் அளவா தான் குடிக்கனும்” என்று.
“என்னதான் குடிச்சாலும் அவிங்க நம்ம பயலுகப்பு, அதுக்கும் தீர்வு சொல்லியாகனும்’ல…” நேத்து அடிச்ச சரக்கோட போதை இன்னும் குறையலையா? அப்ப இதெல்லா சாப்பிடுங்க எல்லா சரியாகிடும்…
முட்டை
சரக்குக்கு நல்லதோர் சைட் டிஷ்ஷாக இருக்கும் முட்டையே, தலைக்கு மேல் ஏறிய போதையை குறைக்கவும் உதவுகிறது. முட்டையில் இருக்கும் வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் போதையை குறைக்க உதவுகிறது.
இளநீர்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸின் தன்மை, தலைக்கு மேல் ஏறிய போதையை உடனடியாக குறைக்க உதவும். இது, மூளையை சுறுசுறுப்படைய உதவுவதே போதை குறைய காரணமாக இருக்கிறது.
இஞ்சி
சிலருக்கு போதை மட்டும் இல்லாது குமட்டலும் இருக்கும். எஸ்.ஜே.சூர்யா பாணியில்,”மச்சி வாந்தி வர மாதிரி இருக்கு ஆனா வரல” என்று நண்பர்களை உயிர் எடுப்பார்கள். அவர்கள் இஞ்சியை சிறிதளவு வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் குமட்டல் மற்றும் போதை இரண்டுமே சரியாகிவிடும். வெறும் இஞ்சியை சாப்பிட கஷ்டமாக இருந்தால் இஞ்சியை நன்கு தட்டி, சுடுநீரில் போட்டு குடிக்கலாம்.
தக்காளி ஜூஸ்
தக்காளி ஜூஸ்ஸில் இருக்கும் முதன்மை குளுக்கோஸ் பொருள் மூளைக்கு சக்தி கொடுக்கிறது, இது மயங்கிய நிலையில் இருக்கும் மூளையை புத்துணர்ச்சி அடைய உதவும். இதனால், போதை விரைவில் குறையும்.
வாழைப்பழம்
மது அருந்துவதனால் உங்கள் உடலில் இருக்கும் நீர் அளவு குறையும். மற்றும் அதிக அளவில் சிறுநீர் கழிவை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடலில் பொட்டாசியம் அளவு குறையும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது உங்கள் உடலை மிகவும் வலுவிழந்து போக செய்யும். இதுவும் ஹேங்கோவர்
மோர்
காலம், காலமாக போதை குறையாமல் இருந்தால் காலையில் மோர் குடித்து போதையை குறைப்பது நமது நாட்டின் கலாச்சார பண்பு. இதனாலேயே பீர், மோர் என்று ரைமிங்கில் வசனம் பேசும் இளசுகள் ஏராளமாக இருக்கின்றனர்.
எலுமிச்சை சாரு / டீ
எலுமிச்சை சாரு அல்லது எலுமிச்சை டீ பருகினால் போதை விரைவில் குறையும்