25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
4 honey cinnamon 1624507545
ஆரோக்கியம் குறிப்புகள்

வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா?

தொப்பை கொழுப்பு/எடையை குறைக்க வேண்டுமா?  அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ட்ராக்ஸ் டிரிங்க் எனப்படும் டிடாக்ஸ் பானம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். ஏனெனில் டிடாக்ஸ் பானங்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. பொதுவாக, நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் செரிமான மண்டலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். டிடாக்ஸ் பானங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான அமைப்பு உங்கள் எடையைக் குறைக்கும் இலக்கை எளிதில் அடைய உதவும்.எனவே, நீங்கள் அதிக எடை மற்றும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் ஒரு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பானத்தை குடிக்கவும். ஒருவேளை நீங்கள் கடுமையான உணவைப் பின்பற்ற முடியாவிட்டால் உடல் எடையை குறைக்க, உங்கள் தினசரி உடற்பயிற்சியுடன் காலையில் வெறும் வயிற்றில் பின்வரும் பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வெட்டிவேர் நீர்
வெட்டிவேர் குளிர்ச்சியான பண்புகளுக்கு பெயர் போனது. இத்தகைய வெட்டிவேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, நரம்பு தளர்வு , தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் இது சருமத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

கொத்தமல்லி நீர்

கொத்தமல்லி விதைகளானது செரிமான நொதிகள் மற்றும் அமிலங்களை தூண்டிவிட்டு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதோடு இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களான, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்றவையும் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட மல்லி விதையை இரவு தூங்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, இரவு முழுவதும் நீரில் வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நிச்சயம் காணலாம்.

சீரகம்-எலுமிச்சை நீர்

சீரகம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் கலோரிகளை வேகமாக எரிக்க உதவும். அப்படிப்பட்ட சீரக விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பானதும் எலுமிச்சை சாறு பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தேன் கலந்த பட்டை நீர்

இரவு தூங்கும் முன் தேன் சாப்பிடுவது, தூங்கும் போது அதிகளவு கலோரிகளை எரிக்க உதவி புரியும். ஏனெனில் தேனில் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. தேனில் உள்ள அத்தியாவசிய ஹார்மோன்கள் பசியை அடக்கி, உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மறுபுறம் பட்டை உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைத்து, எடை இழப்பை ஆதரிக்கிறது. மேலும் பட்டையில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டிபாராசிடிக் பண்புகள் உள்ளதால், இது ஆரோக்கியமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். இத்தகைய பட்டை சளி, அலர்ஜி, கொழுப்பு, சிறுநீர்ப்பை தொற்று போன்றவற்றைத் தடுக்கிறது. எனவே காலையில் எழுந்ததும் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.

வெந்தய நீர்

வெந்தயத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், வைட்டமின் பி6, புரோட்டீன் மற்றும் டயட்டரி நார்ச்சத்து போன்ற நன்மை பயக்கும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. வெந்தயத்தின் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகள் அதில் உள்ள சபோனின்கள் மற்றும் நார்ச்சத்துக்களால் தான் கிடைக்கின்றன. முக்கியமாக வெந்தயத்தில் உயர்தர நார்ச்சத்து உள்ளதால், இது மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கும் உதவுகிறது. எனவே வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை நீருடன் சாப்பிட வேண்டும். இதனால் உடல் சூடு குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களும் கரையும்.

மஞ்சள் நீர்

மஞ்சள் மருத்துவ குணமிக்க ஒரு அற்புதமான மசாலாப் பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், தெர்மோஜெனிக் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட மஞ்சள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதற்கு சுடுநீரில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.

Related posts

நம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

nathan

நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால்!….

sangika

நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி

nathan

பிரசவத்திற்கு பின் உண்டாகும் மாற்றம்

nathan

மகளிர் பக்கம் மாதவிலக்கு…

nathan

120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?

nathan

அடிக்கடி தொல்லை தரும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சில இயற்கை வழிமுறைகள்!!!

nathan

இனியும் செய்யாதீர்கள்! திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு..

nathan

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan