28.5 C
Chennai
Saturday, May 17, 2025
love
Other News

இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம்..

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராய் இருப்பார்கள். இவர்கள் பொதுவாக மற்றவர்களை நம்புவதில்லை, அதற்கு அவர்களுக்கு முழுஉரிமை உண்டு. அடுத்தடுத்து சவால்களை எதிர்கொள்ள இவர்கள் எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள், இது அவர்களுக்குள் ஒரு ஈகோவை அதிகரிக்கும். இவர்கள் பொதுவாக யாரையும் நம்பாமல் இருப்பதால் அனைவரின் மீதும் சந்தேகம் கொள்வார்கள். ஒருவர் இவர்களுக்கு எதிராக ஏதாவது செய்கிறார்கள் என்று இவர்களுக்கு தெரிந்தால் முதல் அடி இவர்கள் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

துலாம்

 

துலாம் ராசிக்காரர்கள் ஒரு சேகரிப்பாளர்கள். ஏனெனில் இவர்கள் நண்பர்கள், உறவுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் சேகரிப்பார்கள். இதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் உறவுகளையும், உடமைகளையும் மற்றவர்கள் தந்திரமாக பறிக்கும் போது இவர்கள் கோபப்படுவார்கள். துலாம் ராசிக்காரர்களை உங்களால் விமர்சிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் தான் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் சரியாக இருப்பார்கள். தேவை ஏற்படும்போது தன்னையும், தான் சார்ந்த அனைவரும் இவர்கள் பாதுகாத்து கொள்வார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் அவர்கள் தன்னை பாதுகாத்துக் கொள்பவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் பாதுகாத்து கொள்வது உங்களிடம் இருந்து என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் தற்காத்துக் கொள்வதுடன் தாக்கவும் செய்வார்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என்று நினைத்தால் அதன்பின் நீங்கள் அவர்கள் கண்ணில் படமால் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. அவர்களின் எதிரிகள் பட்டியலில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் மீது தாக்குதல் நடந்தாலும், நடக்கா விட்டாலும் எப்போதும் தற்காப்புடன்தான் இருப்பார்கள். இதனை அவர்கள் தங்களின் அடையாளமாக பார்க்கிறார்கள். யாரோ ஒருவர் அவர்களுடன் உடன்படவில்லை என்று அவர்கள் காத்திருப்பது போல் தோன்றினால், அவர்கள் வெறுக்கத்தக்க தற்காப்பில் ஈடுபடுவார்கள். தன்னை யாரும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்த இவர்கள் விரும்புகிறார்கள். இதனால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள். இவர்களுடன் பழகுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் எதுவாக இருந்தாலும் அதில் முழுஅர்பணிப்புடன் ஈடுபடுவார்கள். இவர்கள் கடினமாக நேசிப்பார்கள் அதேசமயம் தனது எல்லையை விட்டு வெளியே வரமாட்டார்கள். இவர்களுடன் நெருங்கிப் பழக நினைத்தாலும் அது கடினமான ஒன்றுதான், ஏனெனில் இவர்கள் யாரையும் நம்பமாட்டார்கள், உங்களால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்று நினைப்பார்கள். தன்னை தற்காத்து கொள்ள இவர்கள் அனைவரிடமும் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இதற்காக அவர்கள் எதையும் ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.

 

Related posts

இந்த ராசிக்காரங்க காதலிப்பாங்களாம் – ரொமான்ஸ் பண்ண மாட்டாங்களாம்…

nathan

இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி

nathan

தொடையழகைக் காட்டும் ஏஜண்ட் விக்ரம்மின் மருமகள்!

nathan

12 ஆண்டுக்குப் பின் புதன்-குருவின் அபூர்வ நிகழ்வு..

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

5 போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு

nathan

புறக்கணிக்க முடியாத நரம்பியல் அறிகுறிகள்

nathan

மூலிகை பன்னீர் கிரேவி

nathan