31.1 C
Chennai
Saturday, May 25, 2024
potato roast 1623398931
சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு – 4

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி -சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் வரை நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்குடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நீரை ஊற்றி நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பிறகு பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் நன்கு ரோஸ்ட்டாகும் வரை கிளறி விட வேண்டும். முக்கியமாக கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அதன் பின் மேலே கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்தால், சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.

Related posts

சுவையான முள்ளங்கி கூட்டு

nathan

என் சமையலறையில்!

nathan

சூப்பரான சிக்கன் -தேன் சூப்

nathan

பூசணி சாம்பார்

nathan

சூடான உருளைக்கிழங்கு அவல் உப்புமா

nathan

சுவையான மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா

nathan

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan