32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
1 tomato onion gotsu 1665146455
சமையல் குறிப்புகள்

சுவையான தக்காளி வெங்காய கொஸ்து

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* புளி – 1 சிறிய துண்டு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

* தண்ணீர் – தேவையான அளவு1 tomato onion gotsu 1665146455

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

Onion Tomato Gotsu Recipe In Tamil
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி நன்கு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான தக்காளி வெங்காய கொஸ்து தயார்.

Related posts

பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

nathan

பாலக் டோஃபு கிரேவி ருசி தெரியுமா உங்களுக்கு…..

sangika

குழந்தைகள் விரும்பி உண்ணும் பாஜ்ரா கிச்சடி!

sangika

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan

சுவையான பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல்

nathan

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

nathan

சுவையான சின்ன வெங்காய குழம்பு

nathan

மட்டன் கொத்துக்கறி ரெசிபி

nathan

சுவையான காளான் வறுவல்

nathan