28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 63017a5c6ad00
ஆரோக்கிய உணவு

கருப்பட்டியில் ஒரிஜினலானு கண்டறிய சூப்பரான ஐடியா!

 

இன்றும் கிராமப்புறங்களில் சர்க்கரையை விட கருப்பட்டிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது., நகரத்தில் உள்ள பலர் கருப்பட்டியின் அதிசயங்களைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.

 

மிழரின் வாழ்வில் முக்கிய பங்காற்றிய கருப்பட்டிஇன்றைய தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால் அந்த வியாபாரம் வெளிநாடுகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் கருப்பட்டியிலும் களப்படம் சேர்கின்றது.

அசல் கருப்பட்டிகண்டுபிடிக்க ஒரு சிறந்த வழி உள்ளது. இதைப் பார்ப்போம்.

ஒரிஜினல் கருப்பட்டி எது?

  1. சுவையை வைத்து கண்டறிவதற்கு, உண்ணும் போது அதன் சுவை நல்ல வாசனையுடன் இனிப்பாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி ஆகும்.
  2. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.
  3.  முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தல் கருப்பும், பழுப்புக் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.
  4. ஒரிஜினல் கருப்பட்டி எவ்வளவு நாள் வீட்டில் இருந்தாலும், கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி , சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்து விடும்.
  5. அதேபோன்று, ஒரிஜினல் கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
  6. கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போலி கருப்பட்டியில், பளபளப்புடன் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டும். ஆனால், ஒரிஜினல் கருப்பட்டியில் கையில் எடுத்து உற்றுப் பார்த்தால் பளபளப்பு தன்மை இருக்காது.

Related posts

பூண்டுப் பால்! weight loss tips

nathan

காலையில் வெல்லம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வெளிநாடுகளில் மவுசு காட்டும் தமிழர்களின் பாரம்பரிய உணவு!!கொரோனாவை கட்டுப்படுத்தும் ரசம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுவதும் மாத்திரை தேவையில்லை!

nathan

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

nathan

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

nathan

சுவையான மாதுளை மில்க்ஷேக்

nathan

பாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி???? ஆரோக்கியம் & நல்வாழ்வு!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்…!

nathan