ஆரோக்கியம் குறிப்புகள்

பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?…

பிரசவத்திற்குப் பிந்தைய ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு. இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இரத்த சோகை அவற்றில் ஒன்று. வளரும் நாடுகளில் தாய்மார்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

 

பிரசவத்திற்குப் பிறகு ஊட்டச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது. உங்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு ஒரு வாரத்திற்குள் 110 கிராமுக்குக் குறைவாக இருந்து பிரசவத்திற்குப் பிறகு 8 வாரங்களுக்குள் 120 கிராமுக்குக் குறைவாக இருந்தால் நீங்கள் இரத்த சோகை உள்ளீர்கள் என்று அர்த்தம்.

பிரசவத்துக்கு பின் இரத்தசோகை என்றால் என்ன?

பிரசவத்துக்கு பிறகு உங்களது இருப்புச்சத்து குறைவாக இருப்பதால் ஏற்படுவதே இரத்தசோகையாகும். அதாவது உங்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு பிரசவம் முடிந்து ஒரு வாரத்திற்குள் 110 கிராம் முதல் ஏட்டு வாரங்களுக்குள் 120 கிராமிற்கு குறைவாக இருக்கும் போது உங்களுக்கு இரத்தசோகை உள்ளது என்று அர்த்தம்.

இரத்த சோகை உருவாகும் மூன்று நிலைகள்

1. முதல் நிலை

முதலில் உங்கள் எலும்புகளில் உள்ள இரும்புச்சத்து குறையத் தொடங்குகிறது. பின்னர் படிப் படியாக உங்கள் இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தும் குறைய தொடங்குகிறது. இது தான் உங்கள் இரத்தசோகைக்கான முதல் அறிகுறி. இதை தவிர வேற எந்த காராணமும் முதல் நிலையில் கண்டுபிடிக்க இயலாது.

 

2. இரண்டாம் நிலை

இந்த நிலையில் நீங்கள் பக்க விளைவுகளை கண்டறியலாம். அதாவது, நீக்க மிகச் சோர்வாக உணருவீர்கள். மற்றும் தலைவலி அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இபப்டி எதுயெனும் அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து உங்களுக்கு இரத்தசோகை உள்ளதா எனக் கண்டு அறிந்து கொள்ளலாம்.

3. மூன்றாம் நிலை

இதுதான் உங்கள் இரத்தசோகைக்கான கடைசி அறிகுறியாகும். இந்த நிலையில் உங்கள் இரத்தத்தின் அளவு மிக மிக குறைந்து நீங்கள் இரத்த சோகைக்கு உள்ளர்வீர்கள். இந்த நிலையில் நீங்கள் மிக சோர்வாக உணர்ந்து உடல் சோர்ந்து போக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையை தடுக்க நீங்கள் ஹீமோகுளோபின் அளவை முன் கூட்டியே கண்டு அறிவது அவசியம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

காரணங்கள் என்ன?

1. உணவின் முக்கியத்துவம்

மகப்பேறின் போதும் பிரசவத்துக்கு பின்னும் உங்கள் உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

பிரசவத்தின் போது உங்களுக்கு தினமும் 4.4 மில்லிகிராம் இருப்புச்சத்து தேவைப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து போதுமான அளவு இருப்புச்சத்து கிடைக்காது. இதனால் கண்டிப்பான முறையில் இருப்புச்சத்து மாத்திரைகளை எடுத்து கொள்ளவேண்டும்.

 

2. மகப்பேறுக்கு பின்

உங்கள் மகப்பேறுக்கு பின்பு ஏற்படும் அதிக அளவிலான இரத்தப்போக்கு உங்கள் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து இரத்தசோகைக்கு வழிவகுக்கும்.

குடல் நோய்கள்

உடலில் உள்ள இரும்புச்சத்து குறைவதால் சில குடல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக பிரசவ காலத்தில் வயிற்றுப்புண், ஹார்மோன் சுரப்புப் பிரச்சினைகள் இருக்கும். அதோடு இணைந்து அஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. இரும்புச்சத்து குறைய ஆரம்பிக்கும் பொழுது, உங்களுடைய உடலில் உண்டாகும் மாற்றங்களை உங்களாலே உணர்ந்து கொள்ள முடியும்.

பிரசவத்திற்கு பிறகு இரத்தசோகைக்கான அறிகுறிகள்:

அதிகமான சோர்வு

வெளிறிய தோல்

மனசோர்வு

குழப்ப்பம்

குழந்தைகளின் எடை குறைவு

தாய்ப்பால் இல்லாமை

தாய்ப்பால் குறைவு

மூச்சுத்திணறல்

தலைவலி

தலைசுற்றல்

வேகமான இதய துடிப்பு

எரிச்சல்

மனநிலை மாற்றம்

நோய் எதிரிப்புசக்தி குறைவு

இவை அனைத்தும் ஒரே நாளில் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் இதில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்புடைய அபாயங்கள்

பிரசவத்திற்கு பிறகு இரத்த சோகைக்கான சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் சில மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சோர்வு காரணமாக அன்றாட பணிகளை முடிக்க இயலாமை

முன்கூட்டிய குழந்தை பிறத்தல் அல்லது அடுத்த கற்பதில் ஏற்படும் சிக்கல்கள்

தீவிர சோர்வு

தலைசுற்றல்

பக்கவிளைவுகளால் திடீர் மரணம்

பிரசவத்திற்கு பிறகு இரத்தசோகைக்கு உள்ளாகும் பெண்கள்

பிரசவத்திற்கு முன்பு அல்லது பின்பு ஏற்படும் இருப்புச்சத்து குறைபாடு

இரட்டை குழந்தைகள்

கர்ப்பத்திற்கு முன்பு பி.எம்.ஐ 24 க்கு மேல் இருத்தல்

பிரசவத்திற்கு பிறகு குறைந்த ஓய்வு

கர்ப்பகாலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு

குறைப்பிரசவம் அல்லது பின்கூட்டிய குழந்தை பிறப்பு

உயர் இரத்த அழுத்தம்

இந்த மாற்றங்கள் உங்கள் குழந்தைகளையும் பாதிக்கின்றன.

 

தாய்ப்பாலை சுரப்பை பாதிக்குமா?

இரத்தசோகை பால் நோய்களுடன் தொடர்புடையது தான். இது உங்கள் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் அளவு சுரப்பதைக் குறைக்கிறது. குழந்தைகளின் ஆரம்ப வயதில் தாய்ப்பால் கொடுப்பது அவர்களின் எடை அதிகரிப்பிற்கு உதவும். சுமார் 22% சதவீதம் தாய்மார்கள் பிரசவத்திற்கு பிறகு இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button