29.2 C
Chennai
Tuesday, May 21, 2024
8 backpain
மருத்துவ குறிப்பு

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று. சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான தண்ணீரை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக கற்கள் சிறுநீர்க்குழாய்களுக்குள் கரைந்த தாதுக்களின் திரட்சியின் விளைவாகும். இந்த சிறுநீரக கற்கள் உருவாவது பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும். பொதுவாக, ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உங்கள் சிறுநீரகங்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் போதுமான தண்ணீர் இல்லாமல், சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்வது கடினமாகி, சிறுநீரில் அதிக அமிலத்தன்மையை உண்டாக்குகிறது, சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
இது சிறுநீரக கல் அறிகுறிகளில் மிகவும் பொதுவான அறிகுறியாகும். நீண்ட நாட்களாக சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை அனுபவித்தால், உடனே பரிசோதனை செய்வது நல்லது. சில நேரங்களில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றும் சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறியாகும். சிறுநீர் கழிக்கும் போது வலியை அனுபவித்தால், சிறுநீர்ப்பையில் கற்கள் சிக்கியுள்ளது என்று அர்த்தம். இதுப்போன்ற அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரில் இரத்தம்

கழிக்கும் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தால், சிறுநீரக கற்கள் உள்ளது மற்றும் இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதற்கு உடனடி சிகிச்சை பெற மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருந்தாலும், சிறுநீரக கற்களின் அறிகுறியும் கூட. இம்மாதிரியான அறிகுறி சிறுநீரக கற்கள் கீழ் சிறுநீர் பாதைக்கு நகர்ந்துள்ளதைக் குறிக்கிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இந்த கவலையைத் தவிர்க்க வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தெளிவற்ற அல்லது துர்நாற்றமிக்க சிறுநீர்

சிறுநீர் பிங்க், சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. ஆனால் துர்நாற்றத்துடன் அல்லது தெளிவற்ற நிலையில் இருக்கும். இது சிறுநீரக கற்களின் தெளிவான அறிகுறியாகும்.

சிறுநீர் பாதை அடைப்பு

முன்பே கூறியதைப் போன்று, சிறுநீரக கற்களின் அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இது சிறுநீரக கற்கள் கீழ் சிறுநீர் பாதையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகும். இந்நிலையில் கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து அழுத்தத்தைக் குறைக்கும்.

காய்ச்சல்

காய்ச்சலும், குளிரும் சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரக பாதையிலோ தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியம்.

வாந்தி

சிறுநீரகங்கள் இரைப்பைக் குழாயுடன் நரம்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆகவே இது வயிற்று உப்புசம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். அதிலும் வாந்தி கடுமையான வலியின் எதிர்வினையின் காரணமாகவும் ஏற்படலாம்.

முதுகு வலி

முதுகு வலி அல்லது வயிற்று வலி சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தில் கற்கள் பெரிதாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ இருந்தால், இம்மாதிரியான வலியை அனுபவிக்கக்கூடும். ஆரம்பத்தில் வலி தாங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அது சில நாட்கள் கழித்து தாங்க முடியாத அளவில் இருக்கும். வலியில் இருந்து விடுபட உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

Related posts

உங்களுக்கு ஒரே ஒரு நொடியில் பற்களை வெண்மையாக்கும் டெக்னிக் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!!!

nathan

எச்சரிக்கை! நாக்கில் உள்ள நிறம் உணர்த்தும் நோய்கள்

nathan

‘வைரஸ் காய்ச்சல்’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

nathan

மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிற ப்பு கட் டுப்பாட்டிற்குப் பின்னர் கரு த்தரிக்கும் வழிமுறைகள்!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! காதுக்குள் இருக்கும் பருக்களால் அவஸ்தையா?

nathan

உருளைக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

nathan

அடிக்கடி புளித்த ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா?

nathan