34.1 C
Chennai
Sunday, May 18, 2025
dfgvdgvf
முகப் பராமரிப்பு

பொலிவான பளபளக்கும் முகம் வேண்டுமா?

வெயில் காலங்களில் அதிக வியர்வை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் வீக்கம், தசைச் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு.

இதனால் முகம் வாடுகிறது. அந்த காரணத்திற்காக, பலர் பணத்தை செலவழித்து கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இது தற்காலிகமானது.

இழந்த பளபளப்பை மீட்டெடுக்க வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. இப்போது அதை எவ்வாறு தயாரிப்பது? அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையானவை
கற்றாழை ஜெல் – 2 டீ ஸ்பூன்
வெள்ளரிக்காய்
செய்முறை
2 டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து, அதனுடன் அரைத்து வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளவும்.

இதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

ஒரு வாரத்திற்கு தேவையான பேஸ்ட்-ஐ ஒரே நாளில் தயார் செய்து, அதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் சமயங்களில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பலன்கள்
பருவ கால மாற்றங்களால் ஏற்படும் எண்ணெய் வழிந்த முகம் அல்லது வறண்ட முகம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம்.
இது உங்கள் சருமத்தை பொழிவாக மாற்றும்.
கன்னத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.

Related posts

மூக்கைச் சுற்றியிருக்கும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

சிவப்பு நிறம் பெறனுமா? இந்த ஒரு குறிப்பை தினமும் உபயோகிங்க !!

nathan

உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற தினமும் இத செய்யுங்கள்!…

sangika

முகப்பொலிவுக்கு 5 வழிகள்!

nathan

தேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா கலந்து முகத்தில் தேய்த்தால் எவ்வளவு நல்லதுன்னு தெரியுமா?

nathan

உங்களுக்கு இயற்கையான முறையில் முகம் பட்டு போல மின்னவேண்டுமா…?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி!…

sangika

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

மஞ்சள் பேக் போடுவதால் அதிகரிக்கும் முக அழகை கவனித்துள்ளீர்களா?

nathan