36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள்
முகப் பராமரிப்பு

முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள்

ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முகம் பார்ப்பதற்குப் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். . நிரந்தரமாக உங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள, பராமரிக்க எளிமையான வழிகள் உள்ளன.

முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக, முகப்பருக்கள் மறையும். பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். முகத்தின் நிறம் மாறும். தக்காளியை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசி ஊறவைத்து அலம்பினால் பூனை முடி வராது நல்ல பலன் கிடைக்கும். மோரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வர துவாரங்கள் விரைவில் மறையும்.

பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின் தண்ணீர் விட்டு கழுவி வந்தால் முகத்தின் நிறம் மாற்றம் அடையும்.

ஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள்.

அதன் பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்திலன் மெருகு கூடி பளபளப்பாகும்.

Related posts

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan

உங்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..?அப்ப இத படிங்க

nathan

ஒரே வாரத்தில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

உங்க முகம் தங்கம் போல ஜொலிக்க மேக்கப் வேணாம்… இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கண்ணுக்கு பூசிய காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்

nathan

பளிச்சென்ற முகத்திற்கு

nathan

உங்களுக்கு அடர்த்தியான புருவம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

இளமையான சருமத்தை தரும் சிவப்பு திராட்சை ஃபேஸியல் மாஸ்க் !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan