34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சருமத்தை குளிர்ச்சியாக வைக்கும் பழ பேஸ் பேக்!

கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது.

கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. அவை நீரிழப்பு, உலர் சருமம் போன்ற கோடை கால சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

பழங்கள் சாப்பிடுவது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். அதுபோல் பழங்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஷியல் செய்வதும் சரும அழகை மெருகேற்றும். பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை பயன்படுத்தி பேஷியல் மேற்கொள்ளலாம். பப்பாளியில் என்சைம்கள் அதிகமாக உள்ளன. அவை இறந்த செல்களை அகற்ற உதவும். வாழைப்பழம் சரும செல்களை இறுக்கமாக வைத்திருக்க உதவும். ஆப்பிளில் இருக்கும் பெக்டின் சருமத்தை சுத்தப்படுத்த துணை புரியும். ஆரஞ்சு பழம் சருமத்தின் அமில-கார சம நிலையை மீட்டெடுக்க உதவும்.

செய்முறை: வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களை ஒன்றாக சிறு துண்டு களாக நறுக்கி விழுதாக அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20-30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். கோடை காலத்தில் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு இடம் கொடுக்காமல் முகத்திற்கு புத்துணர்வு அளிக்க இந்த ‘பழ பேஸ்பேக்’ உதவும்.-News & image Credit: maalaimalar

Related posts

கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர்!…

sangika

உங்கள் குணநலன்களுக்கு பொருத்தமான ஆத்ம துணை யார்?

nathan

இரவு உணவில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பின்னழகை கட்டுக்கோப்பாக வைக்க செய்யும் உடற்பயிற்சிகள்

nathan

இத படிங்க தயாரிப்பில் கலக்கும் நிறுவனம் `காபியைக் குடியுங்கள், கப்பையும் சாப்பிடுங்கள்!’

nathan

கட்டாயம் இதை படியுங்கள்,, வெந்தயம் தரும் நன்மைகள் என்ன?

nathan

உடல் அழகு – பற்களை எவ்விதம் பாதுகாக்குவது

nathan

மாதுளை சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

nathan

உடை அணிவதில் நீங்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!!!

nathan