30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
gledanje tv a
ஆரோக்கியம் குறிப்புகள்

சாப்பிடும்போது ஏன் டி.வி. பார்க்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

Courtesy:maalaimalarசாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.
அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் பலர் டி.வி.யோ, ஸ்மார்ட்போனோ பார்த்துக்கொண்டு இரவு உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருக்கும்.

சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது. வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சமிக்ஞை செய்யும். கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளின் மீது பதிந்திருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பதற்கு முனைவார்கள். நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடுவது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படியுங்கள்: இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?

திரைக்கு முன்னால் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்?

டி.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடுவீர்கள். டி.வி. பார்த்துக்கொண்டே அவற்றை சாப்பிடுவது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். அவை எந்தவிதமான உடல்நலப் பலன்களையும் வழங்காமல் எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.
இதையும் படியுங்கள்: டெங்கு காய்ச்சல் தரும் பாதிப்பு..

எப்படி சாப்பிடுவது சரியானது?

எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சமிக்ஞை மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சமிக்ஞை மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக சாப் பிடுவதையும் தடுத்துவிடும். என்ன சாப்பிடு கிறீர்கள் என்பதை விட அதை எப்படி சாப்பிடு கிறீர்கள் என்பது முக்கியமானது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இவையெல்லாம் தான் பெண்களால் அடக்கி கொள்ளவே முடியாத ஆசையாம்.. என்னென்ன தெரியுமா?..

nathan

தொப்புளில் எண்ணை போடுங்கள்! அற்புதமான விஷயம்!

nathan

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

nathan

நைட் நேரத்துல இதெல்லாம் பண்ணா உங்களுக்கு தூக்கமே வராது தெரியுமா?

nathan

முதல் இரவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் தெரிந்து கொள்ளலாம்.

nathan

பூசணி விதை தீமைகள்

nathan

டயாபர்கள் குறித்த பகீர் உண்மை தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…ஏன் குழந்தை பிறக்கும்போதே அதிக முடியுடன் பிறக்கிறது தெரியுமா?

nathan