32 C
Chennai
Wednesday, Feb 5, 2025
gledanje tv a
ஆரோக்கியம் குறிப்புகள்

சாப்பிடும்போது ஏன் டி.வி. பார்க்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

Courtesy:maalaimalarசாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.
அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் பலர் டி.வி.யோ, ஸ்மார்ட்போனோ பார்த்துக்கொண்டு இரவு உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருக்கும்.

சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது. வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சமிக்ஞை செய்யும். கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளின் மீது பதிந்திருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பதற்கு முனைவார்கள். நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடுவது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படியுங்கள்: இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?

திரைக்கு முன்னால் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்?

டி.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடுவீர்கள். டி.வி. பார்த்துக்கொண்டே அவற்றை சாப்பிடுவது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். அவை எந்தவிதமான உடல்நலப் பலன்களையும் வழங்காமல் எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.
இதையும் படியுங்கள்: டெங்கு காய்ச்சல் தரும் பாதிப்பு..

எப்படி சாப்பிடுவது சரியானது?

எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சமிக்ஞை மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சமிக்ஞை மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக சாப் பிடுவதையும் தடுத்துவிடும். என்ன சாப்பிடு கிறீர்கள் என்பதை விட அதை எப்படி சாப்பிடு கிறீர்கள் என்பது முக்கியமானது.

Related posts

உங்களுக்குதான் இந்த விஷயம்! கணவன் மனைவி சண்டையின் போது செய்ய கூடாத சில விஷயங்கள்!

nathan

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

nathan

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்!

nathan

உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க முட்டைகளை எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியுமா?

nathan

அடேங்கப்பா! டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

nathan

உங்களுக்குதான்… பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம்!

nathan

அவசியம் படிக்க.. கால் மூட்டுகளில் `கடக் முடக்’ சத்தமும் வலியும் ஏன் வருகிறது;

nathan

வெயில் காலத்தில் உளுந்து சாப்பிடலாமா?

nathan

உடல் எடையை கட்டுக்குள் வைக்க!… இதை மட்டும் சரியாக செய்தாலே போதும்

nathan